ETV Bharat / state

பல்வேறு புதிய திட்ட பணிகளை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார் - கிருஷ்ணராயபுரம் வட்டாட்சியர்கள்

குளித்தலை அரசு மருத்துவமனைக்கு ரூ.50 லட்சம் மதிப்பில் ஆக்ஸிஜன் உற்பத்தி நிலைத்தை அமைச்சர் செந்தில் பாலாஜி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவைத்தார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்

author img

By

Published : Dec 4, 2021, 9:29 PM IST

கருர்: கிருஷ்ணராயபுரம், குளித்தலை சட்டபேரவை தொகுதிகளில் பகுதியில் இன்று (டிச.4) பல்வேறு நிகழ்ச்சிகளில் தமிழ்நாடு மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கலந்து கொண்டார்.

குளித்தலை அரசு மருத்துவமனையில் பெரு நிறுவனங்கள் சமூக பொறுப்புணர்வு நிதி மூலம் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் உயிர்காக்கும் மருத்துவ ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையம் திறப்புவிழா கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் தலைமையில் நடைபெற்றது.

புதிய திட்ட பணிகளை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்

இதனைத் தொடர்ந்து குளித்தலையில் உள்ள அண்ணா திருமண மண்டபத்தில் முதியோர் உதவித்தொகை வழங்கும் ஆணைகளை வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று பயனாளிகளுக்கு வழங்கினார்.

மேலும், இரும்புத்திப்பட்டியில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிப்போருக்கு 95 புதிய எரிவாயு இணைப்புகள், 142 குடும்பங்களுக்கு தேவையான சமையல் பாத்திரங்கள், ஆடைகள் மற்றும் முதியோர் உதவித் தொகைக்கான ஆணைகளை அமைச்சர் செந்தில்பாலாஜி வழங்கினார்.

கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் லாலாபேட்டை மற்றும் சேங்கல் பகுதிகளில் தலா ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் ஆரம்ப துணை சுகாதார நிலையங்கள் அமைப்பதற்கான பணிகளை பூமிபூஜையிட்டு இன்று தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர், குளித்தலை, அரவக்குறிச்சி மற்றும் கிருஷ்ணராயபுரம் சட்டபேரவை உறுப்பினர்கள் சிவகாமசுந்தரி, இளங்கோ, மாணிக்கம், குளித்தலை கிருஷ்ணராயபுரம் வட்டாட்சியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.