கரூர்: கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட செல்லாண்டிபாளையம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ 4.70 கோடி மதிப்பீட்டில் 15 புதிய நகர்ப்புற மற்றும் துணை சுகாதார நிலையங்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவக்கி வைத்தார்.
இது குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், “கரூர் மாவட்ட வரலாற்றில் 15 புதிய ஆரம்ப சுகாதார நிலைய கட்டடங்கள் துவக்கி வைக்கப்படுவது இதுவே முதல்முறை. ஏற்கனவே கரூர் மாவட்டத்தில் ஐந்து நகர்ப்புற சுகாதார நிலையங்கள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பெட்ஷீட் ஸ்கேன் அதிநவீன புற்றுநோய் கண்டறியும் கருவி கோவை அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் நவம்பர் 30ஆம் தேதி சேலம் அரசு மருத்துவமனைக்கு வழங்கப்படவுள்ளது.
-
கரூர் மாவட்டம் தாந்தோணியில் ரூ. 4.70 கோடி மதிப்பீட்டில் 15 ஆரம்ப சுகாதார நிலையங்களில் புதிய மருத்துவ கட்டிடங்கள் திறந்து வைக்கப்பட்டது. #Masubramanian #TNHealthminister #Primaryhealthcentre #DMK4TN pic.twitter.com/I8xwp1RuA1
— Subramanian.Ma (@Subramanian_ma) November 24, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">கரூர் மாவட்டம் தாந்தோணியில் ரூ. 4.70 கோடி மதிப்பீட்டில் 15 ஆரம்ப சுகாதார நிலையங்களில் புதிய மருத்துவ கட்டிடங்கள் திறந்து வைக்கப்பட்டது. #Masubramanian #TNHealthminister #Primaryhealthcentre #DMK4TN pic.twitter.com/I8xwp1RuA1
— Subramanian.Ma (@Subramanian_ma) November 24, 2023கரூர் மாவட்டம் தாந்தோணியில் ரூ. 4.70 கோடி மதிப்பீட்டில் 15 ஆரம்ப சுகாதார நிலையங்களில் புதிய மருத்துவ கட்டிடங்கள் திறந்து வைக்கப்பட்டது. #Masubramanian #TNHealthminister #Primaryhealthcentre #DMK4TN pic.twitter.com/I8xwp1RuA1
— Subramanian.Ma (@Subramanian_ma) November 24, 2023
தமிழ்நாட்டில் 8,713 துணை சுகாதார நிலையங்கள், 2,286 நகர்ப்புற மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் என மொத்தம் 10,999 நகர்ப்புறம் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. இவற்றில் சுமார் 1,000 கட்டடங்கள் மிகவும் சிதலமடைந்தும், வாடகை கட்டடங்களிலும் செயல்பட்டு வருகிறது.
இதற்காக தமிழக அரசு தரப்பில் 800 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, புதிய நகர்ப்புற மற்றும் ஆரம்ப சுகாதார நிலைய கட்டடங்கள் அமைப்பதற்கான பணிகள் துவக்கப்பட்டுள்ளது. இவையெல்லாம் இந்தியாவில் முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ வேண்டும் என்பதற்காக முதலமைச்சர் மேற்கொண்டு வரும் முயற்சிகள்.
பிரதமர் நரேந்திர மோடி, குஜராத் மாடல் என்று கூறி வந்த காலகட்டத்தில், இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு சுகாதார கட்டமைப்புகள் தமிழகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், கரூர் மாவட்டத்தில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை புதுப்பிக்கப்பட உள்ளது.
இது தவிர, குளித்தலையில் உள்ள அரசு மருத்துவமனை, தலைமை அரசு மருத்துவமனையாக மேம்படுத்த ரூபாய் 40 கோடி மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடங்கள் கட்டும் பணிகள் விரைவில் துவங்கப்பட உள்ளது. முன்னதாக, ஆரம்ப சுகாதார நிலையங்களில் பாம்பு கடிக்கும், நாய் கடிக்கும் மருந்துகள் இருப்பு இருந்ததில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்த இரண்டு வகையான மருந்துகளும் போதுமான அளவு இருப்பு உள்ளது.
தமிழகத்தில் ஃபுளு காய்ச்சலுக்கு மருந்து இல்லை என எடப்பாடி பழனிசாமி கூறுவதில் அரசியல் உள்ளது. எடப்பாடி பழனிசாமியை நேரில் அழைத்துக் கொண்டு, எந்த மருத்துவமனைக்குச் சென்று மருந்து இருப்பு எவ்வளவு உள்ளது என்பது குறித்து ஆய்வு செய்ய தயாராக இருக்கிறோம். தமிழகத்தில் ஃப்ளூ காய்ச்சலைக் கட்டுப்படுத்துவதற்கு இதுவரை 8,000 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. மேலும் 10,000 முகாம்கள் நடத்தப்பட உள்ளது” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: கோவையில் தொடரும் ராகிங் பிரச்சினை! ஜூனியருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக சீனியர்கள் உள்பட 3 பேர் கைது!