ETV Bharat / state

முதலமைச்சர் வருகையை முன்னிட்டு மருத்துவமனையை ஆய்வு செய்த அமைச்சர்கள்!

author img

By

Published : Mar 4, 2020, 4:32 PM IST

Updated : Mar 4, 2020, 8:59 PM IST

கரூர்: தமிழ்நாடு முதலமைச்சர் வருகையை முன்னிட்டு கரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தமிழ்நாடு அமைச்சர்கள் தங்கமணி, எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

மருத்துவமனையை ஆய்வு செய்த காவல் துறையினர்

கரூரில் சுமார் 300 கோடி மதிப்பீட்டில் 700 படுக்கைகளுடன் கூடிய புதிய நவீன மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் கட்டுமான பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளதால் நாளை கரூருக்கு வரும் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மருத்துவமனை கட்டடத்தை திறந்து வைக்க உள்ளார்.

இதனைத் தொடர்ந்து நேற்று அதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து தமிழ்நாடு மின்சார மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் தங்கமணி, போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு செய்தனர்.

மருத்துவமனையை ஆய்வு செய்த அமைச்சர்கள்

அப்போது மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனைத்து பகுதிகளுக்கும் சென்று தங்களது ஆய்வுப் பணியை மேற்கொண்டனர். இந்நிகழ்வில் கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் கீதா, மருத்துவக் கல்லூரி முதலமைச்சர் ரோஸி, மருத்துவத் துறை அலுவலர்கள், மருத்துவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: 'டிஎன்பிஎல்' காகித நிறுவனத்திற்கு 'எம்ஜிஆர்' பெயர்: முதலமைச்சரிடம் அமைச்சர் கோரிக்கை

Last Updated : Mar 4, 2020, 8:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.