இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணைகளை வழங்கினார். கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் ஊராட்சி செயலாளராக பணிபுரிந்த தங்கவேல் மகள் மதுபாலா, கரூர் ஒன்றியத்துக்குட்பட்ட புஞ்சை கடம்பன்குறிச்சி ஊராட்சி செயலாளர் கிருஷ்ணன் மகள் லாவண்யா, அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊர் நல அலுவலராகப் பணிபுரிந்த குமார் மனைவி சத்ய ராணி, தாந்தோணி ஊராட்சி ஒன்றிய கோயம்பள்ளி ஊராட்சி செயலாளராக பணிபுரிந்த சரவணன் மனைவி வாசுகி போன்றோருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் கீதா, மாவட்ட ஆட்சித் தலைவர் அன்பழகன், மாவட்ட ஊரக உள்ளாட்சி முகமை கூடுதல் இயக்குனர் கவிதா, மாவட்ட ஊராட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.