ETV Bharat / state

மெகா தடுப்பூசி திட்டம்: கரூரில் 526 இடங்களில் தடுப்பூசி முகாம்கள்! - கரூர் செய்திகள்

கரூர்: இன்று ஒரே நாளில் மாவட்டத்தில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தி சாதனை படைக்கப்படும் என ஆட்சியர் பிரபு சங்கர் தெரிவித்துள்ளார்.

கரூர்
கரூர்
author img

By

Published : Sep 12, 2021, 1:03 PM IST

கரோனா பரவலைத் தடுக்க தமிழ்நாடு முழுவதும் இன்று (செப்.12) மெகா தடுப்பூசி கேம்ப் நடைபெற்று வருகிறது.

அதன்படி, முதன்முறையாக கரூர் மாவட்டத்தில் உள்ள எட்டு ஊராட்சி ஒன்றியங்களில் மொத்தம் உள்ள 526 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம் இன்று காலை 7 மணிக்குத் தொடங்கியது. மாலை 7 மணி வரை இம்முகாம் நடைபெறுகிறது.

இந்த நடைபெறும் முகாம்களின் எண்ணிக்கை விவரங்கள் பின்வருமாறு:

கரூர் 39,

அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் தலா 57,

க.பரமத்தி 82,

குளித்தலை 27,

தோகைமலை 66,

கடவூர் 56 இடங்கள்,

பேரூராட்சிப் பகுதிகளில் 34,

கரூர் நகராட்சிப் பகுதியில் 54,

குளித்தலை நகராட்சிப் பகுதியில் 15,

பெரிய தொழிற்சாலைகள் 4 உள்ளிட்ட 526 இடங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

மருத்துவர் மேற்பார்வைக் குழு, தடுப்பூசி செலுத்தும் குழு, பதிவேடுகள் பராமரிக்கும் குழு, தடுப்பூசி செலுத்திக் கொள்ள வரும் பொதுமக்களை வரிசைப்படுத்தும் குழு, சமூக இடைவெளி, முக்கவசம் கடைப்பிடிக்க கண்காணிக்க உள்ளிட்ட மருத்துவர் குழு, மருத்துவ செவிலியர் குழு, மருத்துவர் அல்லாத அங்கன்வாடி, சத்துணவுப் பணியாளர்களின் பணிக்குழு, கணினியில் பதிவேற்றம் செய்திடும் குழு என 2,500 நபர்களுக்கு மேல் பணிபுரிந்து வருகின்றனர்.

இதனிடையே தடுப்பூசி முகாம் நடைபெறும் கரூர் நகர் பகுதியில் உள்ள முகாம்களை ஆய்வுசெய்த கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர், பொதுமக்களின் வசிப்பிடங்களின் மிக அருகாமையிலே இந்த முகாம் காலை 7 மணி முதல் மாலை 7 வரை நடைபெறுவதால், இன்று ஒரே நாளில் கரூர் மாவட்டத்தில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தி சாதனை படைக்கப்படும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: விழுப்புரத்தில் 1,150 இடங்களில் தடுப்பூசி முகாம்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.