கரூர்: கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள வீரராக்கியம் நடராஜபுரம் பகுதியில் அரசு மதுபானங்களை வாங்கி அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதால் அப்பகுதியில் இருசக்கர வாகனத்தில் வருவோரின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது.
இதனை அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் கண்டித்ததால் அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதுடன் ஜூன் 18ஆம் தேதி இரவு பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது.
இது குறித்து மாயனூர் காவல் நிலையத்தில் விசாரணை நடைபெற்ற நிலையில், ஜூன் 19ஆம் தேதி கரூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் புகார் அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து மாயனூர் காவல் நிலையத்தில் லட்சுமி என்பவர் அளித்த புகார் அடிப்படையில் அதே பகுதியைச் சேர்ந்த அரவிந்த் (21), ராஜதுரை (28), ஐயப்பன், விஜய், பிரவீன், பாரதி, உள்ளிட்ட நபர்கள் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
இதில் அரவிந்த் (21), ராஜதுரை (28) ஆகியோரை மாயனூர் காவல் ஆய்வாளர் பாலகிருத்திகா கைதுசெய்ததுடன் பொதுமக்களுக்கு அச்சுறுத்தி வந்த ஐயப்பன் என்ற முக்கிய நபரை வலைவீசி தேடிவருகின்றனர்.
மது விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்த பெண்கள் மீது தாக்குதல் நடத்திய இருவர் கைது
மது விற்பனைக்கு எதிர்ப்ப தெரிவித்த பெண்கள் மீது தாக்குதல் நடத்திய இருவரை காவல் துறையினர் கைதுசெய்தனர்.