கரூர் மாவட்டம் பசுபதிபாளையம் பாலத்திற்கு அருகில் அமராவதி ஆற்றில் ஆண் சடலம் தண்ணீரில் மிதந்ததை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இதுகுறித்து பசுபதிபாளையம் காவல்நிலைய காவல்துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் அளித்தனர். இந்த தகவலின்பேரில் விரைந்து வந்த காவல்துறையினர் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில், அவர் பசுபதிபாளையம் வடக்குத்தெரு பகுதியைச் சேர்ந்த பெரியசாமி மகன் சதீஷ் (36) என்பது தெரியவந்தது. மேலும் இவர் மது போதையில் அமராவதி ஆற்றில் விழுந்து உயிரிழந்தார் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. தற்பொழுது அவரது உடல் கரூர் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியில் உடற்கூறாய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பிரபல நகை கடையில் திருட முயன்ற பெண் கைது