கரூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே சுண்ணம்பட்டியைச் சேர்ந்த மரம் ஏறும் கூலித்தொழிலாளி ராஜு (57), கடந்த ஐந்து ஆண்டுகளாக நாமக்கல் மாவட்டம் வேலூர் குப்பிச்சிபாளையத்தில் குடும்பத்துடன் தங்கி தென்னந்தோப்புகளில் தேங்காய் பறிக்கும் வேலையைச் செய்துவந்தார்.
இந்நிலையில் கரூர் புங்கோடை காளிபாளையம் பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமிக்குச் சொந்தமான தென்னந்தோப்பில் தேங்காய் பறிக்கும் வேலைக்குச் சென்றுள்ளார்.
மின்சாரம் தாக்கி உயிரிழப்பு
அப்போது தென்னைமரத்தின் அருகே சென்றுகொண்டிருந்த உயர் அழுத்த மின் கம்பியில் ராஜுவின் உடல் பட்டுள்ளது. இதில் அவர் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த வேலாயுதபாளையம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து ராஜுவின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்விற்காக வேலாயுதபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: மாணவிகளை மிரட்டிப் பணம் பறிக்கும் கும்பலின் தாக்குதல் காணொலி வைரல்