ETV Bharat / state

குளித்தலை தொகுதியில் திமுக வெற்றி - Vote counting

கரூர்: இரண்டாவது முறையாக குளித்தலை தொகுதியில் திமுக வேட்பாளர் மாணிக்கம் வெற்றிஉறுதியாகியது.

கரூர்
கரூர்
author img

By

Published : May 2, 2021, 8:28 PM IST

குளித்தலை சட்டப்பேரவை வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கி சரியாக மாலை ஆறு மணி அளவில் 23 சுற்றுகளில் 22 சுற்றுகள் நிறைவுபெற்றன.

இதில் தொடர்ந்து திமுக வேட்பாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான மாணிக்கம் முன்னிலை வகித்துவந்தார். 22ஆவது சுற்றில் திமுக மாணிக்கம் 22,522 வாக்குகள் முன்னிலை பெற்று தொடர்ந்து வெற்றி முகத்துடன் உள்ளார்.

தற்போது இறுதிச்சுற்று இருபத்தி மூன்றாவது சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுவருகிறது. இருப்பினும் அஞ்சல் வாக்குகள் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னரே, வெற்றி அறிவிப்பும் இறுதி வாக்கு வித்தியாசமும் தெரியவரும்.

இதனால் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைப் பொதுத்தேர்தலில் கரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளில் முதல் வெற்றியை திமுக வேட்பாளர் மாணிக்கம் பதிவுசெய்கிறார்.

2011ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைப் பொதுத்தேர்தலில் குளித்தலை தொகுதியில் முதல் முறையாக மாணிக்கம் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

தொடர்ந்து நடைபெற்ற 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் போட்டியிட திமுக சார்பில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இருப்பினும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திமுகவில் தீவிர கட்சி பணியாற்றியதைத் தொடர்ந்து கட்சித் தலைமை அவருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கியது.

தற்பொழுது இரண்டாவது முறையாக குளித்தலை சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் மாணிக்கம் வெற்றிக்கனியை பறிக்கிறார்.

மறைந்த திமுக தலைவர் கருணாநிதி முதல்முறையாக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட தொகுதி குளித்தலை தொகுதி என்பது அத்தொகுதிக்கு உள்ள மற்றொரு சிறப்பு ஆகும்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.