கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மே 10ஆம் தேதி ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில், படிப்படியாக தளர்வுகள் குறைக்கப்பட்டு ஊரடங்கு கடுமையாக்கப்பட்டு வருகிறது.
மே12ஆம் தேதி இதுதொடர்பாக கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங்சாய் ஆலோசனை நடத்தினார். இரு ஜவுளி சங்கங்கள் மே 17ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை கடைகள் திறக்கப்படாது என அறிவித்த நிலையில், கரூர் ஜவுளி உற்பத்தி ஏற்றுமதியாளர் சங்க நிறுவனங்கள் மட்டும் செயல்பட்டு வந்தது.
இந்நிலையில் மின்சாரத் துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி, மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு வடநேரே, காவல் கண்காணிப்பாளர் சசாங்சாய் ஆகியோர் தலைமையில் மே17ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் கரோனாவின் தொற்று தீவிரத்தை கட்டுப்படுத்த கரூர் ஜவுளி உற்பத்தி ஏற்றுமதி நிறுவனங்கள் மூடவேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
![செந்தில் பாலாஜியுடன் நடந்த ஆலோசனைக் கூட்டம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-krr-06-textailes-manifacturers-association-stop-work-news-pic-scr-tn10050_17052021230504_1705f_1621272904_367.jpg)
இதையடுத்து கரூர் ஜவுளி உற்பத்தி ஏற்றுமதி நிறுவனங்கள் நாளை (மே 19) முதல் மே 23ஆம் தேதி வரை 5 நாள்களுக்கு செயல்படாது என அறிவித்துள்ளது. இது தொடர்பான அடுத்த அறிவிப்பு வரும் மே 22ஆம் தேதி அறிவிக்கப்படும் என கரூர் ஜவுளி உற்பத்தி ஏற்றுமதியாளர் சங்க தலைவர் அட்லஸ் நாச்சிமுத்து தெரிவித்தார்.
![ஜவுளி உற்பத்தி ஏற்றுமதி நிறுவனங்கள் செயல்படாது](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-krr-06-textailes-manifacturers-association-stop-work-news-pic-scr-tn10050_17052021230504_1705f_1621272904_263.jpg)
இதையும் படிங்க: மருத்துவமனையில் படுக்கைகள் கிடைக்கவில்லையா? பயன்படுத்துங்கள் "FindABed" செயலியை..!