கரூர்: தனியார் கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த 19 வயது மாணவி இன்று தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தொடர்ந்து தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற வெங்கமேடு காவல் துறையினர், மாணவியின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக கரூர் காந்தி கிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர் வெங்கமேட்டில் நேற்று முன்தினம் 17 வயது தனியார் பள்ளி மாணவி பாலியல் தொல்லையால் (karur school girl) கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து மற்றொரு கல்லூரி மாணவி தற்போது தற்கொலை செய்து கொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: Trichy SSI Murder: திருச்சியில் காவல் உதவி ஆய்வாளர் வெட்டிக்கொலை