ETV Bharat / state

"ஜல் ஜீவன் திட்டத்தால் நிலத்தடி நீர் மட்டம் குறைகிறது" - கரூரில் மக்கள் எதிர்ப்பால் திணறும் அதிகாரிகள்! - எதிர்ப்பு தெரிவிக்கும் கரூர் மக்கள்

karur cauvery river jal jeevan mission scheme: காவிரி ஆற்றில் இருந்து 'ஜல்ஜீவன்' திட்டத்தில் குடிநீர் எடுக்கும் திட்டத்திற்கான பணிகளுக்கு கரூர் மாவட்ட பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், இந்த பணியால் தங்கள் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் பாதிப்படைவதுடன், விவசாயமும் கேள்விக்குறியாகி உள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர். இது குறித்து அலசுகிறது இந்த செய்தித் தொகுப்பு.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 22, 2023, 10:45 PM IST

கரூரில் ஜல் ஜீவன் திட்டத்திற்கு எதிர்ப்பு

கரூர்: கரூர் காவிரி ஆற்றில் நஞ்சை புகலூர் தவிட்டுப்பாளையத்தில் மத்திய அரசின் ஜல்ஜீவன் குடிநீர் திட்டத்திற்குப் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கரூர் மாவட்டத்தில் பாயும் காவிரி ஆறு நொய்யல் பகுதியில் துவங்கி புகலூர் வாங்கல் வழியாக மாயனூர் கதவணைக்குச் செல்கிறது. அங்கிருந்து அகண்ட காவேரியாக முசிறி, குளித்தலை வழியாகக் கொள்ளிடம், கல்லணை ஆகிய இரண்டு பகுதிகளுக்குச் சென்று, டெல்டா மாவட்டங்களுக்குக் குடிநீர்த் தேவை மற்றும் விவசாய பாசன வசதி பெறுவதற்காகக் காவிரி ஆறு முக்கிய ஆறாக உள்ளது.

மத்திய அரசு மூலம் இந்தியா முழுவதும் 2024-க்குள் குடிநீர் தட்டுப்பாட்டை போக்குவதற்குச் சிறப்பு நிதி ஒதுக்கீடு ஒதுக்கப்பட்டு, ஜல்ஜீவன் திட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு மற்றும் குடிநீர் கிடைக்கப்படாத கிராமங்களுக்குச் சிறப்புக் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, கரூர் மாவட்டத்தில் பாயும் காவிரி ஆற்றிலிருந்து நஞ்சை புகலூர் கிராமத்தில் உள்ள தவிட்டுப்பாளையம் பகுதியிலிருந்து அரவக்குறிச்சி, திண்டுக்கல் வழியாக ராமநாதபுரம் மாவட்டத்திற்கு ஜல் ஜீவன் (Jal Jeevan Mission) குடிநீர் திட்டம் மூலம் குழாய்கள் அமைத்து குடிநீர் கொண்டு செல்வதற்கான முதல் கட்ட பணிகளைத் தனியார் ஒப்பந்த நிறுவனம் கடந்த ஒருமாத காலமாகக் கரூர், நாமக்கல் மாவட்டத்தை இணைக்கும் காவிரி கரையோரம் பணிகளைத் துவக்கியுள்ளனர்.

கிராம சபைக் கூட்டத்தில் சிறப்புத் தீர்மானம்: இப்பணிகள் துவங்கப்பட்ட சில நாட்களில் கரையோரம் உள்ள தவிட்டுப்பாளையம் பகுதியில் உள்ள போர்வெல் கிணறுகள் நீர்மட்டம் திடீரென வறண்டு போனது இதற்குக் காரணம், திடீரென தோண்டப்பட்ட ராட்சத பள்ளமும், அப்பள்ளத்திலிருந்து ராட்சத மோட்டார்கள் மூலம் ஆற்றில் தண்ணீர் வெளியேற்றப்பட்டு கட்டுமானப் பணிகள் துவங்கியதே காரணம் என அப்பகுதி பொதுமக்கள் ஆகஸ்ட் 15 கிராம சபைக் கூட்டத்தில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றி தமிழக அரசுக்கும் கரூர் மாவட்ட நிர்வாகத்திற்கும் அனுப்பி வைத்துள்ளனர்

குறையும் நிலத்தடி நீர்மட்டம்: இதுதொடர்பாக கரூர் வருவாய்க் கோட்டாட்சியர் ரூபினா தலைமையிலான அரசு அதிகாரிகளிடம் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், காவிரி ஆற்றில் துவங்கியுள்ள புதிய குடிநீர் திட்டப் பணிகளால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதாகப் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் குடிநீர் திட்டத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் அதிகாரிகளிடம் முறையிட்டனர்.

இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள கிணறுகள் மற்றும் ஆழ்குழாய் குடிநீர் கிணறுகள் ஆகியவற்றின் நிலத்தடி நீர்மட்டத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து சென்றனர். இது தொடர்பாக, கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆகஸ்ட் 21ஆம் தேதி பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாமில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் குடிநீர் திட்டப் பணிகளை வேறு இடத்தில் மாற்றி அமைக்க வேண்டுமெனக் கோரிக்கை விடுத்து மனு அளித்தனர்.

இது தொடர்பாக, நஞ்சை புகலூர், தவுட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த குணாளன் ஈடிவி பாரத்திற்கு அளித்த பேட்டியில், காவேரி ஆற்றங்கரை ஓரம் மிக அருகில் அமைந்துள்ள தங்கள் பகுதியில் இருந்து நகராட்சி ஊராட்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீர் திட்டங்கள் கொண்டு செல்லப்படுகிறது. மேலும், ஒரு புதிய திட்டத்தால் முற்றிலும் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து போய் உள்ளது. இதனால், கிராம சபை கூட்டத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றிய அரசுக்கு அனுப்பி உள்ளோம்' எனத் தெரிவித்தார்.

தவிட்டுப்பாளையம் அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த குரு ராஜன் என்பவர் கூறுகையில், 'காவிரி கரையோரம் 2000 மக்கள் தொகை கொண்ட தங்கள் கிராமத்தை அழித்து வேறொரு கிராமத்திற்கு தண்ணீர் கொண்டு செல்ல நினைப்பதைதான் தாங்கள் எதிர்ப்பதாகவும், அரசின் திட்டத்திற்கு இடையூறாக தங்கள் பகுதி மக்கள் இல்லை என்றும் தெரிவித்தார். ஆகவே, வேறு இடத்தில் இந்த குடிநீர் திட்டத்தை செயல்படுத்துமாறு அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.

இது தொடர்பாக தவிட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த வேலு என்பவர் கூறுகையில், 'கிராமங்களை வளர்ப்பதாக அரசு கூறிவிட்டு, ஒவ்வொரு திட்டங்களால் கிராமங்களை அழித்து வளர்ச்சி என்பதை ஏற்படுத்த முடியாது என்று சாடினார். குடிநீர் இல்லையென்றால், பணம் கொடுத்து குடிநீர் பெறவேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்றும் இப்பகுதியில் வெற்றிலை விவசாயம், வாழை, நெல் உள்ளிட்ட பயிர்கள் இப்பகுதியில் உள்ள நிலத்தடி நீர்மட்டத்தை நம்பியே உள்ளதாகவும் ஆகவே, விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்' என கூறியுள்ளார்.

நஞ்சை புகலூர் பகுதியை சேர்ந்த ஈஸ்வரன் என்பவர் கூறுகையில், 'ராட்சத இயந்திரங்களைக் கொண்டு தோண்டப்பட்டபோது, திடீரென வீட்டில் அமைக்கப்பட்டிருந்த போர்வெல் குழாய்களில் தண்ணீர் இல்லாமல் போனது. தற்போது மூன்று நாட்கள் நிறுத்தப்பட்டதால், மீண்டும் தண்ணீர் ஊற்று ஏற்பட்டுள்ளது என்றார். பொதுமக்களின் நியாயமான கோரிக்கையை ஏற்று அரசு வேறு இடத்தில் இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஒட்டுமொத்த மக்களின் கோரிக்கையாக, புதிதாக துவங்கப்பட்டுள்ள குடிநீர் திட்டத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்பதே ஒருமித்த கருத்தாக உள்ளது. கரூர் மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் மக்களின் கோரிக்கைகளை செவிசாய்த்து இக்கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இதையும் படிங்க: நிலவை தொட்ட சந்திராயன்கள்..! சவால்கள் நிறைந்த சந்திராயன்களில் தமிழர்களின் பங்களிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.