ETV Bharat / state

5 ஆண்டுகளாக வீணாகும் மக்களின் வரிப்பணம்... புலம்பும் கரூர் மக்கள் - அமராவதி பாலத்தின் இணைப்புச் சாலைகள்

கரூர்: பல கோடி ரூபாய் செலவில் அமராவதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலம் முடிவடைந்தும் இணைப்பு சாலைகள் அமைக்காததால் பாலம் பயன்பாட்டுக்கு வராமல் மக்களின் வரிப்பணம் வீணாகிறது என அப்பகுதி மக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

karur people given compliant for not opening bridge on amaravathi river

author img

By

Published : Dec 15, 2020, 5:06 PM IST

கரூர் மாவட்டத்தில், அமராவதி ஆற்றின் குறுக்கே மேலப்பாளையம் - கோயம்பள்ளி இடையே சுமார் 15 கோடி ரூபாய் மதிப்பில் கடந்த 2015ஆம் ஆண்டு பாலப்பணிகள் தொடங்கப்பட்டன. இந்தப் பணிகள் முடிவடைந்து சுமார் ஐந்து ஆண்டுகளாகியும் பாலத்தின் இருபுறமும் இணைப்புச் சாலைகள் அமைக்கப்படாமல் உள்ளது. எனவே, இந்தப் பாலம் தற்போதுவரை மக்கள் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. இதனால் இரு கரைகளில் வசிக்கக்கூடிய கிராம மக்கள் தங்கள் விவசாயத்திற்கு தேவையான இடு பொருட்கள், விளை பொருட்கள் ஆகியவற்றை உரிய நேரத்தில் கொண்டு செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது என வருத்தம் தெரிவிக்கின்றனர்.

இந்த ஆறு பெரும்பாலான காலங்களில் தண்ணீர் வரத்து இல்லாமல் வறண்டு கிடந்தாலும், மழை காலங்களில் திறந்துவிடப்படும் வெள்ள நீர் ஆற்றின் இரு கரைகளையும் தொட்டு செல்கின்றன. மேலும், இப்பகுதியில் வசிக்கும் மக்கள் இந்தப் பாதையை கடந்து செல்வதற்கு வேறு வழிகளும் இல்லை.

அமராவதி ஆற்றின் குறுக்கே பாலம்

இதனைக் கருத்தில் கொண்டே பாலப்பணிகள் தொடங்கப்பட்டும், இன்றுவரை இணைப்புப் பாலம் கட்டப்படாமல் உள்ளன. இதுதொடர்பாக அரசுக்கு பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அமராவதி ஆற்றில் தற்போது தண்ணீர் வரத்து உள்ளதால், அப்பகுதி மக்கள் மருத்துவமனைக்கு செல்வதாக இருந்தாலும் 16 கி.மீ தொலைவிற்கு பயணிக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

பணி நிமித்தமாக வெளியில் செல்வோரும் இதனால் பெரிதளவில் பாதிக்கப்படுகின்றனர். எனவே இந்த பாலத்தின் இரு கரைகளிலும் இணைப்புச் சாலை அமைத்து இந்த பாலத்தை உடனடியாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தமிழ்நாடு அரசு திறந்துவிட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.