கரூர்: அரவக்குறிச்சி பழைய மார்க்கெட் கடை வீிதியில் குடியிருப்பவர் பாத்திமா பீபி(74). இவரது மகன் அதே பகுதியில் கடை நடத்தி வருகிறார். இவர் தாயார் பாத்திமா பீபி வசித்து வரும் வீடு, மிகவும் பழமையானது என்பதால் ஆறு மாதத்திற்கு முன்பே அதனை இடிக்க திட்டமிட்டார். ஆனால், பாத்திமா பீபி தான் இருக்கும் வரை வீட்டை இடிக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டதால், வீட்டை இடிக்காமல் விட்டு விட்டனர்.
இந்த நிலையில், எதிர்பாராத விதமாக இன்று(நவ.29) காலை சுமார் 8 மணியளவில் திடீரென வீடு இடிந்து விழுந்தது. இதில் மூதாட்டி பாத்திமா பீபி இடிபாடுகளில் சிக்கிக் கொண்டார். இச்சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற வீரர்கள், இரண்டு பொக்லைன் இயந்திரங்களின் உதவியோடு இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 25 தீயணைப்பு வீரர்கள் மற்றும் 25 போலீசார் மூதாட்டியை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க:Video: சிசிடிவி ஆதாரம் கொடுத்தும் கிடப்பில் போடப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதியின் புகார்