கரூரில் தமிழ்நாடு சுற்றுலாத் துறை, ஏமூர் ஊராட்சி சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில், போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கலந்து கொண்டார். பின்னர் அவர் கிளி ஜோசியம் பார்த்தார். கூண்டிலிருந்து வெளியே வந்த கிளி சிவன், பார்வதி, முருகன், விநாயகர் அடங்கிய புகைப்படத்தை எடுத்தது.
இதற்கான பலனை ஜோதிடர் படித்தார். அப்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக ஆட்சி மீண்டும் அமையும் என்று கூறினார். இதைக் கேட்ட அதிமுக நிர்வாகிகள் ஆரவாரம் செய்தனர்.
இதையும் படிங்க: தேர்தல் களம் 2021: சசிகலா விடுதலை பேச்சுகளால் அதிமுகவில் ஏற்பட்டுள்ள சலசலப்பு!