ETV Bharat / state

முழு ஊரடங்கு : கரூரில் வெறிச்சோடிய சாலைகள்! - Curfew Violotion

கரூர்: தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு அமல்படுததப்பட்டுள்ள நிலையில் கரூர் நகரின் முக்கிய சாலைகள் பொதுமக்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன.

கரூரில் முழு ஊரடங்கு  கரூர் மாவட்ட செய்திகள்  ஊரடங்கு மீறல்  வெறிச்சோடிய சாலைகள்  Karur District News  Curfew Violotion  karur lockdown news
karur lockdown news
author img

By

Published : May 11, 2021, 6:49 AM IST

கரோனா தொற்றுப்பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் தமிழ்நாடு முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது. இதன் காரணமாக கரூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய பகுதிகளில் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை அத்தியாவசிய பொருட்களுக்கான கடைகளும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டு, மூடப்பட்டது. பொதுமக்கள் இருசக்கர வாகனங்களில் வருவதைத் தவிர்த்தும், தகுந்த இடைவெளியை கடைபிடித்தும் பொருட்களை வாங்கிச் சென்றனர்.

மருத்துவ, சுகாதார பணியாளர்கள், அரசு அலுவலர்கள் தவிர வேறு யாரும் வாகனங்களில் வெளியே வருவதற்கு அனுமதிக்கப்படவில்லை. கரூர் பேருந்து நிலையம், மனோகரா கார்னர் பகுதியில் காவல் துறையினர் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். கரூர் உழவர் சந்தை பகுதியில் பொதுமக்கள் வரத்து குறைவாக இருந்ததால் கூட்ட நெரிசல் குறைந்தே காணப்பட்டது.

மினி ஆட்டோக்கள், வாடகை கார்கள், அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால், முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. வங்கிச் சேவை 2 மணி வரை தொடர்ந்து நடைபெற்றதால், அங்கு மட்டும் பொதுமக்கள் அதிகளவில் தகுந்த இடைவெளியை கடைப்பிடிக்காமல் கூடியிருந்தனர்.

கரூரில் முழு ஊரடங்கு  கரூர் மாவட்ட செய்திகள்  ஊரடங்கு மீறல்  வெறிச்சோடிய சாலைகள்  Karur District News  Curfew Violotion  karur lockdown news
வங்கியில் அலைமோதும் மக்கள் கூட்டம்

கரூர் நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் நகராட்சி சுகாதாரத்துறை சார்பில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகிறது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய் உத்தரவின் பேரில் தீவிர ரோந்துப் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: நூதன முறையில் தங்கத் துகள்களைக் கடத்தியவர்களுக்கு வலைவீச்சு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.