கரூர் மாவட்டம், குளித்தலையில் மிகவும் பிரசித்தி பெற்றது மகா மாரியம்மன் கோயில். இந்தக் கோயில் திருவிழாவை முன்னிட்டு கடந்த மே மாதம் 19ம் தேதி பெரிய பால்குட பெரு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று மகா மாரியம்மன் பெரிய தேர் திருவிழா வீதி நிகழ்ச்சி மிகவும் விமரிசையாக நடைபெற்றது. முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்த தேரை வடம்பிடித்த பக்தர்கள், கடும் வெயிலிலும் ஆர்வத்துடன் தேரை இழுத்து புறப்பட்ட இடத்திலேயே மாரியம்மன் சன்னதியில் முன்பு நிறுத்தினர்.
இதில், ஏராளமான பக்தர்கள் வடம்பிடித்து அம்மனை தரிசித்தனர். மேலும், தேர் திருவிழாவுக்கு வந்திருந்த பக்தர்களுக்கு தமிழ்நாடு இந்து திருக்கோவில் கூட்டமைப்பு மாநில செயலாளர் திரு அருள்வேல் தலைமையில் அன்னதானம் வழங்கப்பட்டது.