கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தொகுதியில் தார் சாலை அமைக்கும் பணியை கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ கீதா மணிவண்ணன் கலந்துகொண்டு தொடங்கி வைத்தார். மேலும் அவர் புலியூர், குளத்துப்பாளையம், உப்பிடமங்கலம், மணவாடி, மூக்கணாங்குறிச்சி போன்ற பகுதியில் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜையில் கலந்துகொண்டார்.
அப்போது கீதா மணிவண்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "கரூரில் புலியூர் ரயில்வே கேட் அருகில் திருச்சி தேசிய நெடுஞ்சாலை முதல் ஓடமுடையார்பாளையம்வரை, தார் சாலை அமைக்க சுமார் ஒரு கோடியே 20 லட்சம் ரூபாயை அரசு ஒதுக்கியுள்ளது. மேலும், பேருந்து நிழற்குடை போன்ற பணிக்காக 3 கோடியே 31 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட உள்ளது" என்றார்.
இந்நிகழ்ச்சியில் அதிமுக கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: கொடைக்கானலில் சாலையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் முன்வருமா?