கரூர் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் முன்னிலையில் போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், 42 சுய உதவி குழுக்களின் மூலம் 472 நபர்களுக்கு 23 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான சிறப்பு கடன் உதவிகள் ஆறு மாதத்தில் திரும்ப செலுத்தும் வகையில் ஒரு நபருக்கு அதிகபட்சமாக ஒரு லட்சம் வரை வழங்கியுள்ளார்.
அப்போது அவர் பொதுமக்களிடம் பேசுகையில், "கரூர் மாவட்டத்தில் 42 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வீடு திரும்பிய பின் சென்னை, மஹாராஷ்டிராவிலிருந்து வந்த நபர்கள் மூலம் கரூரில் மீண்டும் வைரஸ் தொற்று பரவியது.
இதுவரை கரூர் மாவட்டத்தில் சமூக தொற்று பரவவில்லை. மேலும், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிறப்பாக சிகிச்சை அளிப்பது பெருமையாக இருக்கிறது" என அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சுய உதவிக் குழுக்களுக்கு ஒரு கோடி மதிப்பிலான சிறப்பு கடனுதவித் திட்டம்!