கரூர் மாவட்ட அரசு கலைக் கல்லூரியில் (தன்னாட்சி) 2016-19ஆம் கல்வியாண்டில் படித்த இளநிலை பட்டதாரி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மதிப்பெண் பட்டியலில் குளறுபடி ஏற்பட்டுள்ளது. அதில் பருவ மதிப்பெண் விழுக்காட்டிலும், ஒருங்கிணைந்த மதிப்பெண் பட்டியல் விழுக்காட்டிலும் வித்தியாசம் உள்ளது.
இந்தக் குளறுபடி, கரூர் மாவட்ட அரசு கலைக் கல்லூரியில் படித்த மாணவரின் மதிப்பெண் சான்றிதழ், மத்திய அரசு பணியின்போது சரிபார்க்கப்பட்டதில் கண்டுபிடிக்கப்பட்டது. அதனால் மாணவர் அளித்த புகாரின் அடிப்படையில், 1200 மாணவ-மாணவிகளை வரவழைத்து மதிப்பெண் சான்றிதழ் சரிபார்க்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கான இழப்பீட்டில் குளறுபடி - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!