ETV Bharat / state

முதலமைச்சர் வேண்டுகோளுக்கு இணங்க எளிமையான முறையில் வரவேற்பு அளித்த கரூர் திமுகவினர்... - நிறைவு பெற்ற 95 புதிய கட்டடங்களைத் முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்

கரூர் மாவட்டத்திற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (ஜூலை 2) வருகை தந்த நிலையில், முதலமைச்சரின் வேண்டுகோளுக்கு இணங்க அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் கரூர் திமுகவினர் எளிமையான முறையில் வரவேற்பு அளித்தனர்.

கரூர் மாவட்டத்திற்கு வருகை தந்த முதலமைச்சர் ஸ்டாலின் தொழிலதிபர்கள் மற்றும் வர்த்தக சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை கரூர் மாவட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

author img

By

Published : Jul 2, 2022, 8:29 AM IST

கரூர்: முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு கரூர் மாவட்டத்திற்கு முதல் முறையாக வருகை தரும் திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலினுக்கு கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளரும், மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் மாணிக்கம், சிவகாமசுந்தரி, இளங்கோ, கரூர் மாநகராட்சி மேயர் கவிதா மற்றும் துணை மேயர் தாரணி சரவணன் மற்றும் கரூர் மாவட்ட திமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். முன்னதாக, கரூர் மாவட்ட எல்லையான குளித்தலையில் தொடங்கி கிருஷ்ணராயபுரம், மாயனூர், புலியூர், வெள்ளியணை, வெங்ககல்பட்டி பிரிவு, கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை சாலைகளில் இருபுறமும் திமுகவினர் முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் உற்சாகமான முறையில் எளிமையாக கரூர் திமுகவினர் வரவேற்பு அளித்தனர்

இதனிடையே, சில தினங்களுக்கு முன்னதாக கரூர் மாவட்டத்தில் முதலமைச்சர் வருகையின் போது பட்டாசுகள் வெடிக்கவும் கொடி, தோரணங்கள், விளம்பரப் பலகைகள் வைக்கக் கூடாது என முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டதற்கு இணங்க திமுகவினர் எளிமையான முறையில் வரவேற்பு அளித்தனர்.

கரூர் மாவட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

அதன் பின்னர், கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இரவு 8 மணி அளவில் முதலமைச்சர் ஸ்டாலின் வர்த்தக சங்க நிர்வாகிகள், கரூர் மாவட்ட டெக்ஸ்டைல் ஏற்றுமதியாளர் சங்க நிர்வாகிகள் மற்றும் கயிறு தயாரிப்பு கொசுவலை உற்பத்தியாளர்கள், பேருந்து கூண்டு கட்டும் நிறுவன உரிமையாளர்கள், உணவு தானிய உற்பத்தி செய்யும் தொழிலதிபர்கள், தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகள் ஆகியோருடன் கலந்துரையாடல் மேற்கொண்டார்.

கரூர் மாவட்டத்திற்கு வருகை தந்த முதலமைச்சர் ஸ்டாலின்

இந்நிகழ்ச்சியில், கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர், அமைச்சர் செந்தில் பாலாஜி, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி, இந்திய தொழில் கூட்டமைப்பு கரூர் தலைவர் வெங்கடேசன், கரூர் மாநகராட்சி மேயர் கவிதா, வாட்ச் பில்டர் அசோசியேஷன் தலைவர் முருகானந்தம், கரூர் மாவட்ட வர்த்தக தொழிற்சங்கத்தின் கரூர் மாவட்ட செயலாளர் வெங்கட்ராமன் உள்ளடோர் கலந்து கொண்டனர்.

கரூர் மாவட்டத்திற்கு வருகை தந்த முதலமைச்சர் ஸ்டாலின் தொழிலதிபர்கள் மற்றும் வர்த்தக சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை

இதனை தொடர்ந்து இன்று (ஜூலை 2) முதலமைச்சர் கின்னஸ் சாதனை நிகழ்வாக ஒரே நாளில் கரூர் மாவட்டத்தில் மட்டும் 80 ஆயிரத்து 750 பயனாளிகளுக்கு 500.83 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். மேலும் 589 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 99 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். இதனைத் தொடர்ந்து பணிகள் நிறைவு பெற்ற 95 புதிய கட்டடங்களைத் முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

இதையும் படிங்க: சிலர் என்னை விளம்பரப் பிரியர் என்கிறார்கள்; எனக்கு விளம்பரம் தேவையா ? - ஸ்டாலின்..

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.