கரூர் மாவட்டம் வடிவேல் நகர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாரதிய ஜனதா கட்சியின் கரூர் மாவட்டத் தலைவர் சிவசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் பாஜக மாநில இணைப் பொருளார் சிவசுப்பிரமணியம் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசுகையில், “அமெரிக்க அதிபர் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்தை வைத்து வாக்கு சேகரிக்கின்றனர்.
உலகின் வல்லரசு நாடுகளில் ஒன்றான அமெரிக்கா நமது பாரத பிரதமரை வைத்து வாக்கு சேகரிப்பது முக்கிய காரணம் தலைசிறந்த மனிதர்களுள் நமது பாரத பிரதமரும் ஒருவர் ஆவார்” என்றார்.
இக்கூட்டத்தில் உறுப்பினர்கள், நிர்வாகிகள் என 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.