கரூர் மாவட்டத்தில் மே மாதம் முதல் வாரத்தில் 175 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். ஆனால், நேற்று (மே.30) ஒரே நாளில் 488 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியானது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் சிகிச்சைப் பெறுவதற்காக, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்பட அரசு மருத்துவமனைகளில் 18 இடங்களில் 850 படுக்கைகளும், கரூரில் உள்ள 21 தனியார் மருத்துவமனைகளில் 473 படுக்கைகளும், கரோனா சிறப்பு மையத்தில் தனிமைப்படுத்தபட்ட 17 மையங்களில் 717 படுக்கை வசதிகள் என, மொத்தம் 2,040 படுக்கைகள் மட்டும் கரூர் மாவட்டத்தில் உள்ளன.

கரோனா தொற்று பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை, தற்போது மூவாயிரத்தைக் கடந்துள்ளது. மேற்கண்ட புள்ளி விவரத்தின்படி, 4ஆவது வாரத்தின் இறுதியில் கரோனா பாதிப்பு இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது.
நடப்பு மாதத்தில் மட்டும் 9,387 பேருக்குத் தொற்று கண்டறியபட்டது. மே மாதத் தொடக்கத்தில் மொத்த இறப்பு எண்ணிக்கை 58ஆக இருந்தது. மே மாதத்தில் மட்டும் கரோனாவுக்கு 140 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது மொத்த உயிரிழப்பு 197ஆக உயர்ந்து உள்ளது.
கரூர் மாவட்டத்தில், இதுவரை 2 லட்சத்து 92 ஆயிரத்து 75 பேருக்கு ஆர்டிபிசிஆர் சோதனை மேற்கொள்ளப்பட்டு, 16 ஆயிரத்து 732 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. சிகிச்சைப் பெற்று 12, 996 பேர் நலமுடன் வீடு திரும்பியுள்ளனர்.
இதனிடையே நேற்று(மே.30) புதிதாக 488 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதன் காரணமாக, கரூர் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை 3, 539ஆக அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: நடமாடும் ஆக்ஸிஜன் பேருந்து: கரூர் ஆட்சியரிடம் வழங்கிய சிஐஐ