கரூர் மாவட்டம், குளித்தலை பரிசல் துறையில் செயல்படும் வேளாண் பொறியியல் துறை அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளராக கார்த்திக் என்பவர் பணியாற்றி வந்தார்.
இந்தத் துறையின் கீழ் விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசின் பல்வேறு திட்டங்களின் அடிப்படையில் நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கார்த்திக் தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி லஞ்சம் கேட்டதாக எழுந்த புகரை அடுத்து, திருச்சி லஞ்ச ஒழிப்பு காவல் துணை கண்காணிப்பாளர் அண்ணாமலை தலைமையிலான லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் இன்று காலை வேளாண் பொறியியல் துறை அலுவலகத்துக்கே வந்து அவரை கைது செய்தனர்.
இதுதொடர்பாக, கார்த்திக்கும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் வாசிங்க: 'என்ன உடை அணிய வேண்டும் என்று எனக்குத் தெரியும் ' - கலாசார காவலர்களுக்கு ஜோதிமணி பதிலடி