ETV Bharat / state

அதிமுகவின் கோட்டை என்பதை நிரூபிக்கும் நேரமிது – அரவக்குறிச்சி ஒன்றியச் செயலாளர் - ADMK election campaign

கரூர்: அரவக்குறிச்சி ஒன்றியத்தில் உள்ளாட்சித் தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில், கரூர் மாவட்டம் அதிமுக-வின் கோட்டை என்பதை நிருபிக்கும் நேரமிது என்று அரவக்குறிச்சி கிழக்கு அதிமுக ஒன்றியச் செயலாளர் கோ. கலையரசன் சூளுரை.

karur-ADMK-election-campaign
author img

By

Published : Oct 10, 2019, 7:54 AM IST

Updated : Oct 10, 2019, 6:59 PM IST

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, அரவக்குறிச்சி அ.தி.மு.க கிழக்கு ஒன்றியத்தின் சார்பில், கொடையூர், நாகம்பள்ளி ஆகிய ஊராட்சிகளின் உள்ளாட்சித் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது.

கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில், உள்ளாட்சித் தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டமும், உள்ளாட்சித் தேர்தலுக்கான விருப்பமனு வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், பேசிய அரவக்குறிச்சி கிழக்கு ஒன்றியச் செயலாளர் கோ. கலையரசன், இந்தப் பகுதியில் உள்ள அனைத்து கிளைகளிலும் வீடுவீடாகச் சென்று மக்களின் குறைகளை சேகரித்த, நமது கரூர் மாவட்ட செயலாளரும், தமிழக போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவ்வப்போது பல்வேறு நல்லதிட்டங்களை செய்திருக்கிறார்.

அரவக்குறிச்சி கிழக்கு அதிமுக ஒன்றிய செயலாளர் கோ.கலையரசன் சூளுரை

நமது முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் இணைந்து தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை தீட்டியுள்ளனர். கரூர் மாவட்டம் நமது அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவர்களின் கோட்டை என்பதை வரும் உள்ளாட்சி தேர்தலில் நிரூபிக்க வேண்டும் என்றார்.

இதையும் படிக்க: இனி சட்டப்பேரவைக்குள் கேமராக்களுக்கு அனுமதி கிடையாது: சபாநாயகர் அறிவிப்பு!

Intro:அ.தி.மு.க வின் கோட்டை என்பதை நிருபிக்கும் நேரம் இது – அரவக்குறிச்சி கிழக்கு அ.தி.மு.க ஒன்றிய செயலாளர் கோ.கலையரசன் சூளுரைBody:உள்ளாட்சி தேர்தல் களைகட்டியது ! கரூர் அருகே அரவக்குறிச்சி ஒன்றியத்தில் உள்ளாட்சி தேர்தல் குறித்த ஊராட்சி கூட்டம் ! கரூர் மாவட்டம் அ.தி.மு.க வின் கோட்டை என்பதை நிருபிக்கும் நேரம் இது – அரவக்குறிச்சி கிழக்கு அ.தி.மு.க ஒன்றிய செயலாளர் கோ.கலையரசன் சூளுரை
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, அரவக்குறிச்சி அ.தி.மு.க கிழக்கு ஒன்றியத்தின் சார்பில், மலைக்கோவிலூர் சங்கமம் மஹாலில், கொடையூர், நாகம்பள்ளி ஆகிய ஊராட்சிகளின் உள்ளாட்சி தேர்தல் ஆலோசனை கூட்டம், கிழக்கு ஒன்றிய அவைத்தலைவர் மோகன்குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் கோ.கலையரசன் சிறப்புரையாற்றினார். கிழக்கு ஒன்றிய பொருளாளர் வெங்கடேஷ் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில், உள்ளாட்சி தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டமும், உள்ளாட்சி தேர்தலில் விருப்பமனு வழங்கும் நிகழ்ச்சியும் அதை தொடர்ந்து கட்சி வளர்ச்சிக்கான ஆலோசனை கூட்டமும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், பேசிய அ.தி.மு.க வின் அரவக்குறிச்சி கிழக்கு ஒன்றிய செயலாளர் கோ.கலையரசன், இந்த பகுதியில் உள்ள அனைத்து கிளைகளிலும், வீடு, வீடாக சென்று மக்களின் குறைகளை சேகரித்து, நமது கரூர் மாவட்ட செயலாளரும், தமிழக போக்குவரத்து துறை அமைச்சருமான அண்ணன் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவர்களிடம் கூறியுள்ளேன், அமைச்சரும், அத்யாவசிய தேவைகளை உணர்ந்து அவ்வப்போது பல்வேறு நல்லதிட்டங்களை செய்ததோடு, இந்த அரவக்குறிச்சி தொகுதிக்கு தத்துப்பிள்ளையாக இருந்து, அனைத்து நல்ல திட்டங்களையும் தீட்டினார். ஆனால் கடந்த முறை நடந்த அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தலில், ஒட்டுகளை மக்கள் மாற்றி குத்தியுள்ளனர். இருப்பினும் நம் மக்கள் என்று இன்னும் ஏராளமான நலத்திட்டங்களை தீட்டி வருகின்றார். அவர் எப்போதும் நம் அமைச்சர் தான் அவரது தொகுதி தான் அரவக்குறிச்சி என்றும், நமது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் ஆகியோர் இணைந்து இந்திய அளவில் தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை தீட்டியுள்ளனர். இருப்பினும் நம் மக்களை ஏமாற்றி தி.மு.க காங்கிரஸ் கூட்டணி நய வஞ்சகம் செய்கின்றது. அதற்கு நமது உள்ளாட்சி தேர்தலில் அந்த கூட்டணியினை வேர் எடுத்து வீட்டிற்கு அனுப்பி வைப்போம், கரூர் மாவட்டம் நமது அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவர்களின் கோட்டை என்பதை வரும் உள்ளாட்சி தேர்தலில் நிருபிக்க வேண்டுமென்றார்.
Conclusion:
Last Updated : Oct 10, 2019, 6:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.