ETV Bharat / state

'எனக்கும் ஒருமையில் பேசத்தெரியும்' - வார்டு பங்கீட்டில் இருந்து கடுப்பாக வெளியேறிய ஜோதிமணி எம்.பி.

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வார்டு பங்கீட்டில் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் ஜோதிமணி எம்.பி., ஆவேசமாக கூட்டத்தை விட்டு வெளியேறினார்.

jothimani mp boycotted ward allotment meeting at karur
ஜோதிமணி எம்பி
author img

By

Published : Jan 31, 2022, 5:29 PM IST

கரூர்: கரூர் மாவட்டத்தில் மொத்தமுள்ள 246 வார்டுகளில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் திமுக கூட்டணி கட்சியினருடன் கரூர் திமுக மாவட்ட அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில், இன்று (ஜனவரி 31) திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்களுடன் வார்டு பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடந்தது. இதற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமை தாங்கினார்.

பேச்சுவார்த்தையின்போது காங்கிரஸ் கட்சியின் கரூர் மாவட்டத் தலைவர் சின்னசாமி ஒரு பட்டியலைத் தயார் செய்து வழங்கியுள்ளார்.

இதுதவிர காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி தனது ஆதரவாளர்களுக்குப் போட்டியிட வாய்ப்பு வழங்கும்படி ஒரு பட்டியல் கொடுத்துள்ளார்.

வாக்குவாதம்

இது குறித்து அமைச்சர் செந்தில்பாலாஜி திமுக தலைமையில் பேசி 50 விழுக்காடு பட்டியலுக்கு ஒப்புதல் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

ஆனால், ஜோதிமணி எம்.பி., தனது ஆதரவாளர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் எனக் கூறி தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் திமுகவினருக்கும், காங்கிரஸ் கட்சியினருக்கும் பேச்சு வார்த்தையின் போது வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது, அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், அமைச்சர் செந்தில்பாலாஜியை நோக்கி ஒருமையில் பேசியதாகவும், இதனால் திமுகவினர் ஜோதிமணியை வெளியேறும்படி கூறியதாகவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து ஜோதிமணி மற்றும் காங்கிரஸ் கட்சியினர் திடீரென வெளியேறினர். அப்போது, திமுகவினர் பேச்சுவார்த்தையின்போது ஒருமையில் பேசி வெளியே செல்லுமாறு கூறியதாக ஜோதிமணி எம்.பி., வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

வெளியேறிய ஜோதிமணி

வெளியேறிய ஜோதிமணி எம்.பி.

அவரை காங்கிரஸ் கரூர் மாவட்டத் தலைவர் சின்னசாமி அழைத்து வந்து காரில் ஏற்றி அனுப்பி வைத்தார். அப்போது எம்.பி., ஜோதிமணி திமுகவினரை பார்த்து ’உங்கள் வீட்டுக்கு நான் விருந்துக்கு வரவில்லை. ஒருமையில் எனக்கும் திரும்பி பேசத் தெரியும்’ என ஆவேசமாக பேசியபடி வெளியேறினார்.

திமுக பேச்சுவார்த்தையின் போது எம்பி ஜோதிமணி வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், மீண்டும் அடுத்தகட்ட பேச்சுவார்த்தையின்போது சுமுகமாகப் பேசி தீர்க்கப்படும் என திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே அமைச்சர் செந்தில் பாலாஜி, காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைமையிடம் பேச்சுவார்த்தையில் நடைபெற்ற சம்பவம் குறித்து பேசிவருவதாகவும், மீண்டும் எம்.பி., ஜோதிமணி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் புதிய திருப்புதல் தேர்வு அட்டவணை வெளியீடு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.