கரூர் மாவட்டம், சின்னதாராபுரத்தை அடுத்த நஞ்சைகாள குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த அபிலேஷ்க் என்ற இளைஞருக்கு பிறந்த நாள் என்று கூறப்படுகிறது.
இதனால் அதே பகுதியை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒன்று சேர்ந்து ராஜபுரம் கிழக்கு பகுதி சாலையில் அரிவாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியுள்ளனர். இதனை அவர்கள் தங்களது செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களான வாட்ஸ்அப், பேஸ்புக்கில் பதிவிட்டதுடன், வாட்ஸ் அப் ஸ்டேட்டஸிலும் வைத்துள்ளனர்.
இதைக் கண்ட மற்ற இளைஞர்கள் இவர்களின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கது எனக் கூறி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை இந்தக் காணொலியை பகிருங்கள் என்று வாட்ஸ்அப் மூலம் பகிர்ந்தனர்.
இந்நிலையில், இந்தக் காணொலி காவல் துறை உயர் அலுவலர்களின் கண்ணில் படவே, அவர்களை சின்னதாராபுரம் காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: கொலை வழக்கில் தலைமறைவாக இருந்தவர் குண்டர் சட்டத்தில் கைது