ETV Bharat / state

பாரத் பெட்ரோலியம் அருகே தீ விபத்து!

கரூர்: பொதுத்துறை நிறுவனமான பாரத் பெட்ரோலியம் அருகே திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

fire accident near bharat petroleum
பாரத் பெட்ரோலியம் அருகே தீ விபத்து
author img

By

Published : Mar 4, 2021, 8:48 AM IST

கரூர்- ஈரோடு சாலையில் உள்ள ஆத்தூர் பகுதியில் பொதுத்துறை நிறுவனம் பாரத் பெட்ரோலியம் செயல்பட்டு வருகிறது. இங்கு லாரிகள் மூலம் பெட்ரோல், டீசல் விநியோகிக்கப்படும். கேரளா மாநிலம் கொச்சின் துறைமுகத்தில் இருந்து கோயம்புத்தூர் வழியாக கரூர் பகுதியில் பதிக்கப்பட்ட குழாய் மூலம் பெட்ரோல், டீசல் கொண்டுவரப்பட்டு டேங்கர் லாரிகள் மூலம் பெட்ரோல் நிரப்பும் மையங்களுக்கு கரூர், ஈரோடு, திருச்சி, நாமக்கல், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பப்படுகிறது.

இந்நிலையில், பாரத் பெட்ரோலியம் கட்டடத்திற்கு அருகாமையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. நேற்று மாலை (மார்ச்3) சுமார் 4 மணி அளவில் ஏற்பட்ட இந்தத் தீ விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர், மூன்று மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

பாரத் பெட்ரோலியம் அருகே தீ விபத்து

பொதுத்துறை நிறுவனம் அருகே தமிழ்நாடு அரசின் மதுபானக் கடை ஒன்றும் இயங்கி வருகிறது. இங்கு வரும் சிலர் அங்கிருக்கும் திறந்தவெளி பகுதியில் மது அருந்துவதோடு, புகைப்பிடித்துவிட்டு அதை முறையாக அணைக்காமல் தூக்கி எறிவதால் இது போன்ற தீ விபத்துகள் ஏற்படுவதாகத் தெரிவிக்கும் அப்பகுதியினர், முறையான நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கைவிடுக்கின்றனர்.

இதையும் படிங்க: வீட்டிற்குள் புகுந்த 10 அடி நீள மலைப்பாம்பு மீட்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.