கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பஞ்சப்பட்டி கிராமத்தில் 1.8 டிஎம்சி கொள்ளளவு கொண்ட பஞ்சப்பட்டி ஏரியானது 1,170 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இது தமிழ்நாட்டின் மூன்றாவது பெரிய ஏரியாகும்.
மழைக் காலங்களில் காவிரி ஆற்றின் மூலம் வீணாக கடலில் கலக்கும் உபரி நீரை குழாய் மூலம் பஞ்சப்பட்டி ஏரியில் நிரப்பி, ஏரியைச் சுற்றியுள்ள பஞ்சப்பட்டி, போத்து ராவுத்தன்பட்டி, வடவம்பாடி உள்ளிட்ட 25 வருவாய் கிராமங்களுக்கு உட்பட்ட 300க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் பயனடையும் வகையில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தி அப்பகுதி மக்களின் சார்பில் மத்திய, மாநில அரசுகளிடம் பலமுறை கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இந்தக் கோரிக்கையின் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததையடுத்து, இன்று அப்பகுதியில் உள்ள 500க்கும் மேற்பட்ட விவசாயிகள், பொதுமக்கள் பஞ்சப்பட்டி பேருந்து நிலையம் அருகே கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், காவிரியாற்றில் இருந்து தண்ணீரை கொண்டு வர மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
இதையும் படிங்க: ’சாராயம் கடத்தியதிலிருந்து தப்பிக்க செந்தில்பாலாஜி யார் காலில் விழுந்தார் என ஊருக்கே தெரியும்’