கரூர் மாவட்டத்தில் கிருஷ்ணராயபுரம், குளித்தலை, கடவூர், தோகைமலை ஆகிய நான்கு ஊராட்சிகளில் நேற்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. கரூர் மாவட்டம் அழகாபுரியில் நீண்ட நாள்களாக சாலை வசதி செய்து தரக்கோரி அப்பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த மக்களவைத் தேர்தலில் அழகாபுரியிலிருந்து ஒத்தப்பட்டி செல்லும் இரண்டரை கிலோமீட்டர் சாலையை, தேர்தல் முடிந்த பின்பு செய்து தரப்படும் என்று அரசியல் கட்சியினர் வாக்குறுதி அளித்துள்ளனர். ஆனால் மக்களவைத் தேர்தல் முடிந்து எட்டு மாதங்களாகியும் சாலை வசதி செய்து கொடுக்கப்படவில்லை.
இந்நிலையில், நேற்று நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில், அப்பகுதியில் வசிக்கும் 364 வாக்காளர்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்யாமல் கறுப்புக் கொடி கட்டி எதிர்ப்பை தெரிவித்தனர்.
இதையும் படிங்க:
சென்னையில் புத்தாண்டுக் கொண்டாட்டம் - பாதுகாப்புப் பணியில் 15 ஆயிரம் காவல்துறையினர்!