கரூர் மாவட்டம், குளித்தலை, தண்ணீர் பள்ளி பகுதியை சேர்ந்தவர் சுந்தரம் (60). இவர் 2018ஆம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இதுகுறித்து, பெற்றோர் அளித்த புகாரின்பேரில் குளித்தலை காவல் துறையினர், போஸ்கோ சட்டத்தின் கீழ் சுந்தரத்தை கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை, கரூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்த வழக்கின் தீர்ப்பு இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. குற்றவாளிக்கு போஸ்கோ சட்டத்தின் படி 10 ஆண்டுகள் சிறையும், ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். அபராதத்தை கட்ட தவறினால் மேலும் 3 மாதம் சிறையும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 25 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.