கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் செந்தில்நாதனை ஆதரித்து தமிழ்நாடு மின் துறை அமைச்சர் தங்கமணி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது புஞ்சை தோட்டக் குறிச்சியில் உள்ள மலையம்மன் கோயிலில் அவர் சாமி தரிசனம் செய்தார்.
பின்னர், புகலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு ஊர்களுக்கு வீடு வீடாக சென்று தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். நான்கு தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான இறுதி வேட்பாளர்களின் பட்டியலை இன்று அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.