கரூர் மாவட்டம் தாந்தோனிமலை செல்லும் சாலையில் அமைந்துள்ள சுங்க கேட் பகுதியில் ஆட்டோ ஸ்டாண்டர்ட் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI) சார்பாக நீட் தேர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ராஜா தலைமை தாங்கினார்.
இந்நிலையில் நீட் தேர்வால் தொடர்ந்து தமிழ்நாட்டில் மாணவ, மாணவிகளின் தற்கொலை அதிகரித்து வருவதால் உடனடியாக நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனவும், மத்திய மாநில அரசுகளுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.