இது தொடர்பாக கரூர் வாங்கல் குப்பிச்சிபாளையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த செந்தில் பாலாஜி கூறுகையில், "கரூர் மாவட்டத்தில் நாளை (ஜனவரி 3) நடைபெறும் மக்கள் கிராம சபை கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்கவுள்ளார். கரூர் பேருந்து நிலையம் ரவுண்டானா, வெங்கமேடு அண்ணா சிலை, மண்மங்கலம் ஆகிய பகுதிகளில் ஸ்டாலினுக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.
ஆட்சி, அதிகாரம் முடியப்போகும் நிலையில், எடப்பாடி பழனிசாமி விரக்தியின் உச்சத்தில் இருக்கிறார். எங்கும், எதிலும் ஊழல் என்ற நிலையைில் பழனிசாமி ஆட்சி நடத்தி வருகிறார். தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்துக்கான மக்கள் கிராம சபை கூட்டத்தை திமுக நடத்தி வருகிறது. காவல்துறை, ஆட்சி அதிகாரத்தின் உச்சக்கட்ச வெளிப்பாடுதான் கோயம்புத்தூர் மக்கள் சபை கூட்டத்தில் நடந்த சம்பவம்" என்றார்.