கரூரில் மண்மங்கலம் ராமேஸ்வரம்பட்டி அருகே உள்ள எம். புதுப்பாளையம் வாக்குச்சாவடியில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி பொதுமக்களோடு நின்று வாக்களித்தார்.
அப்பொழுது, வாக்குச்சாவடியில் பணியாற்றும் வாக்குச்சாவடி முகவர் கோயிலுக்கு உள்ளேயே இருக்கைகள் வசதிகள் குறைவாக உள்ளது என்பது குறித்து சுட்டிக்காட்டி, வாக்குச்சாவடி அலுவலர்களிடம் இருக்கைகள் செய்துதர கோரிக்கைவிடுத்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த செந்தில் பாலாஜி, "வாக்குப்பதிவு அமைதியான முறையில் தொடங்கியுள்ளது. நடைபெற்ற தேர்தல் ஆட்சி மாற்றத்துக்கான தேர்தல். தமிழ்நாட்டை யார் ஆள வேண்டும்; யார் முதலமைச்சராக வர வேண்டும் எனத் தீர்மானிக்கக்கூடிய தேவை.
மக்கள் தீர்மானித்துவிட்டார்கள்; நிச்சயம் திமுக தலைவர் தமிழ்நாட்டின் முதலமைச்சராக அரியணையில் அமர்வார். பரப்புரைக்குச் செல்லும் இடங்களில் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்ததே இதற்குச் சாட்சி.
கரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணி சுமார் 50,000 ஆயிரம் வித்தியாசத்தில் வெற்றிபெறும்.
மேலும், தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வெற்றிபெறும்" எனத் தெரிவித்தார்.