ETV Bharat / state

மயங்கி விழுந்த முதியவரைத் தூக்கி சென்ற மாவட்ட ஆட்சியர் - நடுரோட்டில் மலர்ந்த மனிதநேயம்! - the elderly man who was drowsy

கரூர்: குளித்தலை அருகே நடுரோட்டில் மயங்கி விழுந்த முதியவரை மாவட்ட ஆட்சியர் ஆசுவாசப்படுத்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

collector
author img

By

Published : Sep 19, 2019, 6:16 PM IST

கரூர் மாவட்டம், குளித்தலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்ய கரூரில் இருந்து மாவட்ட ஆட்சியர் அன்பழகன் சென்று கொண்டிருந்தார். குளித்தலை சுங்கச்சாவடி அருகே சென்று கொண்டிருந்த போது சாலையின் நடுவே 70 வயது முதியவர் மயங்கி விழுந்ததைக் கண்ட போக்குவரத்து காவலர் அவரை தூக்குவதற்கு முயன்று கொண்டிருந்தார்.

முதியவரை தூக்கி வரும் ஆட்சியர் அன்பழகன்
முதியவரைத் தூக்கி வரும் மாவட்ட ஆட்சியர் அன்பழகன்

இதனைப் பார்த்த மாவட்ட ஆட்சியர் உடனடியாக தனது வாகனத்தை நிறுத்தி இறங்கி, போக்குவரத்து காவலருடன் இணைந்து முதியவரை தூக்கிச் சென்று அருகில் இருந்த டீக்கடையில் அமர வைத்து தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்தினார். பின்னர் 108ஆம்புலன்ஸ் ஊர்தியை வரவழைத்து முதியவரை குளித்தலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார்.

முதியவருக்கு உதவும் ஆட்சியர் அன்பழகன்

மேலும் முதியவரின் குடும்ப நிலை குறித்து ஆய்வு செய்து தகவல் தெரிவிக்குமாறு குளித்தலை வட்டாட்சியருக்கு உத்தரவிட்ட அவர், தகுதி இருக்கும் பட்சத்தில் அவருக்கு உரிய முதியோர் உதவித் தொகை பெறுவதற்கான ஆணை வழங்கவும் உத்தரவிட்டார். மாவட்ட ஆட்சியரின் இந்த மனிதநேய செயலை அப்பகுதி மக்கள் வெகுவாகப் பாராட்டினர்.

இதையும் படிங்க: 1 ரூபாய்க்கு இட்லி கொடுக்கும் கோவை பாட்டி - கெளரவித்த மாவட்ட ஆட்சித்தலைவர்

Intro:
நடுரோட்டில் மயங்கிய முதியவர் - தூக்கிச்சென்று ஆசுவாசப்படுத்திய மாவட்ட ஆட்சியர் அன்பழகன் - கரூர் மாவட்டம் குளித்தலையில் நடந்த நெகிழ்ச்சியான சம்பவம்Body:
நடுரோட்டில் மயங்கிய முதியவர் - தூக்கிச்சென்று ஆசுவாசப்படுத்திய மாவட்ட ஆட்சியர் அன்பழகன் - கரூர் மாவட்டம் குளித்தலையில் நடந்த நெகிழ்ச்சியான சம்பவம்

கரூர் மாவட்டம், குளித்தலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் மாண்புமிகு முதலமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகள் குறித்தும், வேளாண்மை துறை சார்ந்த பணிகள் குறித்தும் ஆய்வு செய்வதற்காக கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகன் இன்று கரூரிலிருந்து குளித்தலை நோக்கி சென்று கொண்டிருக்கும் போது குளித்தலை டோல்கேட் பகுதியில் சாலையின் நடுவே சுமார் 70 வயது, மதிக்கத்தக்க கருங்கலாப்பள்ளி என்ற ஊரைச்சேர்ந்த முதியவர் தரு.நடராஜன் என்பவர் மயங்கி விழுந்தார். அவரைத்தூக்க அப்பகுதியில் இருந்த போக்குவரத்துக் காவலர் முயன்றுகொண்டிருந்தார்.

இதைப் பார்த்த மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தனது வாகனத்தை நிறுத்தி போக்குவரத்து காவலருடன் இணைந்து அந்த முதியவரை தூக்கிச் சென்று அருகில் இருந்த டீக்கடையில் அமர வைத்து அவருக்கு குடிக்க தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்தினார்.
பின்னர் 108 அவசர ஊர்திக்கு தனது அலைபேசியில் இருந்து அழைத்து வரவழைத்த மாவட்ட ஆட்சியர் அவர்கள்
குளித்தலை அரசு தலைமை மருத்துவமனைக்கு அவரை அனுப்பிவைத்து, மருத்துவரை போனில் தொடர்புகொண்டு உடனடியாக உரிய சிகிச்சை அளிக்க அறிவுறுத்தினார். போக்குவரத்துக்காவலரையும் மாவட்ட ஆட்சியர் பாராட்டினார்.

மேலும் சம்பந்தப்பட்ட முதியவரின் குடும்ப நிலை குறித்து ஆய்வு செய்து தகவல் தெரிவிக்குமாறு குளித்தலை வட்டாட்சியருக்கு உத்தரவிட்டார் மாவட்ட ஆட்சித் தலைவர் .

மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் மனித நேயமிக்க இந்த செயலை இளைஞர்கள் சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.