கரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், மக்கள் அதிக புழக்கத்தை கட்டுப்படுத்த அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கரூர் மாவட்டத்தில், வாரம்தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்டம் இனி வரும் காலங்களில் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறாது என அறிவித்துள்ளார்.
அதற்கு மாறாக அப்பகுதியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறும். அதற்கென்று தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு மனுக்களை பெறுவார்கள் என தெரிவித்துள்ளார். அதேசமயம் கரூர் மாவட்டத்தில் முக்கிய பகுதியான கிருஷ்ணராயபுரம், அரவக்குறிச்சி, குளித்தலை, கடவூர், மண்மங்கலம், புகளூர் ஆகிய வட்டங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.