கரூர் மாவட்டம் கடவூர் வட்டத்தில் உள்ள தரகம்பட்டி அருகே உள்ள மாவத்தூர் ஊராட்சி சார்பில் கரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அங்குள்ள நான்கு சாலை சந்திப்பில் கரோனா குறித்த விழிப்புணர்வு ஓவியம் பெரிய அளவில் வரையப்பட்டிருந்தது.
அந்த ஓவியத்தைச் சுற்றி துணை ஆட்சியர் தலைமையில் ரங்கராஜன், கடவூர் வட்டாட்சியர் பாலவிடுதி காவல் ஆய்வாளர், மாவத்தூர் ஊராட்சித் தலைவர் கீதா செந்தில் ஆகியோர் உடனிருந்தனர்.
அப்போது அங்கு திரண்டிருந்த 50-க்கும் அதிகமான பொதுமக்கள் அரசு அலுவலர்கள், காவல் துறையுடன் இணைந்து கரோனா தடுப்பு உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.
இதையும் படிங்க: கரோனா: பணியாளர்களின் காலில் விழுந்து வணங்கிய எம்.எல்.ஏ.