ETV Bharat / state

துணைக்காவல் ஆய்வாளருக்கு கரோனா; நகர காவல் நிலையம் மூடல்!

கரூர்: மாவட்டத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ள கரூர் நகரின் காவல் நிலைய துணை ஆய்வாளர்க்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து காவல் நிலையத்தை தற்காலிகமாக மூட நகர காவல் ஆய்வாளர் உத்தரவிட்டுள்ளார்.

Corona for sub inspector; City police station temporarily closed

author img

By

Published : Jul 4, 2020, 10:07 AM IST

கரூர் மாவட்டம் குளித்தலையைச் சேர்ந்த துணைக்காவல் ஆய்வாளர், கரூர் நகர் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் ஜூலை1ஆம் தேதி அவருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அவர் கரூர் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், குளித்தலை காவல் நிலையத்திற்கு வந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் காவலர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்காக, கரூர் நகர காவல் ஆய்வாளர் உதயகுமார் காவல் நிலையத்தை தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்து நோட்டீஸ் ஓட்டினார்.

மேலும் காவல்நிலையத்தில் புகார் அளிக்க வரும் பொதுமக்கள் காவல் நிலையத்திற்கு வெளியே அமைத்திருக்கும் தற்காலிக பந்தலில் புகார் அளிக்கலாம் என்றும் காவல் ஆய்வாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.