கரூர் மாவட்டத்தில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும், மருத்துவப் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதம் குறித்து பொதுமக்களிடையே அதிக விழிப்புணர்வை ஏற்படுத்த தொடர்ந்து களத்தில் பணியாற்றிவரும் ஊடக செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் மற்றும் புகைப்படக்காரர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு சிறப்பு கரோனா கண்டறிதல் பரிசோதனை முகாமினை நடத்த வேண்டுமென்று மாவட்ட ஆட்சியர் அன்பழகன் உத்தரவிட்டிருந்தார்.
அதனடிப்படையில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊடகத் துறையினருக்கான கரோனா கண்டறிதல் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. இந்த நிகழ்வினை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.
இந்த முகாமில் அனைத்து ஊடகத் துறையினரும் ஆர்வமுடன் கலந்துகொண்டு, தங்களை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்திக்கொண்டனர். இந்நிகழ்வின் போது, சுகாதாரத்துறை துணை இயக்குநர் சந்தோஷ்குமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பாவேந்தன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.