கரூர் மாவட்டம் குளித்தலையைச் சேர்ந்த ஒருவர் சில நாள்களுக்கு முன்பு டெல்லி சென்றார். அதையடுத்து, அவர் காய்ச்சல் காரணமாக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரின் ரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் கரோனா பாதிப்பிருப்பது உறுதிசெய்யப்பட்டது.
அதையடுத்து அவர் தனிவார்டில் வைக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருகிறார். அவரது குடும்பத்தினரை பரிசோதிக்க மருத்துவர்கள் ஆலோசனை செய்துவருகின்றனர். உலகம் முழுவதும் கரோனா வைரஸால் ஏழு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 35 ஆயிரம் பேருக்கும் மேல் உயிரிழந்தனர். இந்தியாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு, 29 பேர் உயிரிழந்தனர்.
இதையும் படிங்க: நீலகிரியில் 683 பேர் தனிமை - மாவட்ட ஆட்சியர் தகவல்