கரூர் மாவட்டத்தில் நகராட்சி அலுவலக கூட்டரங்கில் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நகராட்சி ஆணைய் தலைமையில் நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மக்கள் அதிகம் கூடும் திரையரங்கம், திருமண மண்டபம், மருத்துவமனை, பள்ளிக்கூடம், தொழிற்சாலைகள் உள்ளிட்ட இடங்களில் பணியாற்றுவோரும் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.
இந்த முகாமில் சுகாதாரத் துறை நகர்மன்ற அலுவலர் ஸ்ரீபிரியா, கொரோனா வைரஸ் தொடர்பான சில விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார். இதன் பின்பு ரயில் நிலையம், தனியார் தொழிற்சாலை, தனியார் மருத்துவமனை போன்ற இடங்களில் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் நகராட்சி ஆணையர் விளக்கினார்.
மேலும், அனைவரும் கைகளை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் கிருமிநாசினிகளைப் பயன்படுத்திக் கைகளை அவ்வப்போது கழுவ வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
காய்ச்சல், சளி, இருமல் உள்ளவர்கள் பொதுமக்கள் கூடும் இடங்களுக்குச் செல்வதையும் விழாக்களில் பங்குகொள்வதையும் தவிர்க்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்: தூக்கு தண்டனை வேண்டும் - தமிழிசை