கரூர்: தாந்தோன்றிமலை பகுதியில் உள்ள அரசு கலைக் கல்லூரியின் முன்னாள் மாணவருமான செந்தில்பாலாஜி, தமிழ்நாடு மின்சார துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.
இதனை கொண்டாடும் வகையில் அக்கல்லூரி மாணவர்கள் இனிப்புகளை வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசியலில் ஈடுபடத் தொடங்கியது முதல் செந்தில் பாலாஜி ஒவ்வொரு ஆண்டும் கபாடி விளையாட்டுப் போட்டிகளை நடத்தி சிறுவர் முதல் பெரியவர்கள் வரை ஊக்கப்படுத்தி வந்தார்.
எனவே அவர் தற்பொழுது அமைச்சராக பொறுப்பேற்றுள்ளதை கொண்டாடி வருகிறோம் என கொண்டாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: கரோனா சிகிச்சைக்கு ரூ. 2 லட்சத்துக்கும் மேல் பரிவர்த்தனை செய்யலாம்!