கரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் நேற்று கரூர் பேருந்து நிலையம் அருகில் மின்சார கட்டண உயர்வைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாஜக கரூர் மாவட்டத் தலைவர் செந்தில்நாதன் உள்ளிட்ட 1,800 பேர் மீது கரூர் நகர காவல் நிலையத்தில், சட்டவிரோதமாக பொது இடத்தில் கூட்டமாக கூடுதல் மற்றும் பொதுசாலையை மறித்து இடையூறு செய்தது உள்ளிட்ட பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த 25 ஆம் தேதி மூன்று நாட்களுக்கு முன்பு அதிமுக சார்பில் கரூர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட 1,300 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: திமுக அரசுக்கு தைரியம் இருந்தால் பாஜகவினர் மீது கை வைத்துப் பார்க்கட்டும் - அண்ணாமலை சவால்!