கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் வட்டத்திற்கு உட்பட்ட கிழிஞ்சநத்தம் பகுதியில் மணல் மாட்டுவண்டி உரிமையாளர் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாயனூர், மணவாசி, லாலாபேட்டை, சேங்கல், பழைய ஜெயங்கொண்டம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மாட்டுவண்டி உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்திற்கு மாயனூர் மாட்டுவண்டி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் தண்டபாணி தலைமை ஏற்றார்.
இக்கூட்டத்தில் காவிரி ஆற்றை நம்பி பிழைப்பு நடத்தி வரும் மணல் மாட்டுவண்டி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்கு வழி செய்யும் வகையில், காவிரி ஆற்றில் மாட்டு வண்டிகள் மூலம் மணல் அள்ளுவதற்கு அரசு உரிமம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகின்ற திங்களன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மனு அளிக்க உள்ளதாக ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையும் படிங்க: கல்யாணம் முடிச்ச கையோடோ மணமக்கள் செய்த செயலை பாருங்களேன்!
மேலும், திங்கட்கிழமை மனு அளிக்கும் நிகழ்ச்சிக்காக மாயனூரிலிருந்து மூன்று பேருந்துகளில் சென்னை செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.