ETV Bharat / state

பெண்களுக்கு எதிரான வன்கொடுமை விழிப்புணர்வு நிகழ்ச்சி: குடித்துவிட்டு வந்து சேட்டை செய்த முதியவர்!

கரூர்: வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற பெண்களுக்கு எதிரான வன்கொடுமை விழிப்புணர்வு நிகழ்ச்சியில் குடித்துவிட்டு வந்த முதியவர் ரகளையில் ஈடுபட்டுள்ளார்.

பெண்களுக்கு எதிரான வன்கொடுமை விழிப்புணர்வு நிகழ்ச்சி
author img

By

Published : Nov 25, 2019, 8:28 PM IST

கரூர் மாவட்டம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சுவாதி பெண்கள் இயக்கம், தமிழ்நாடு மதுஒழிப்பு இயக்கங்களின் கூட்டமைப்பு ஆகியவற்றின் சார்பில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

சர்வதேச பெண்கள் மீதான வன்முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மதுவின் பிடியிலிருந்து குடும்பங்களையும் குழந்தைகளையும் பாதுகாத்தல், காதல் குறித்த விழிப்புணர்வு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பல அமைப்பினர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். ஆர்ப்பாட்டத்தில், சமீப காலமாக பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை அதிகரித்துள்ளது, குடி நோயாளிகள் தமிழ்நாட்டில் அதிகமாக இருப்பதால் இங்குள்ள அனைத்து சுகாதார மையங்களிலும் மறுவாழ்வு மையங்கள் அமைக்க வேண்டும்.

குடியால் உயிரிழந்த குடும்பங்களுக்கு அரசு 10 லட்சம் ரூபாய் நிதியுதவியும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகையும் வழங்கிட வேண்டும்.

தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் அரசு மதுபான கடைகள், சட்டவிரோத கடைகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கின்றது. இதனை, படிப்படியாக குறைக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பெண்களுக்கு எதிரான வன்கொடுமை விழிப்புணர்வு நிகழ்ச்சி

அப்போது, மதுவுக்கு எதிராகவும் தமிழ்நாடு அரசுக்கு எதிராகவும் முழக்கங்கள் எழுப்பப்பட்டது. அதில், மது அருந்திவிட்டு வந்த முதியவர் ஒருவர் அக்கூட்டத்தில் நின்று அவர்களுடன் இணைந்து கோஷம் எழுப்பி கேலி செய்துள்ளார். அவர் அங்கு இருக்கக்கூடிய பெண்ணின் உறவினர் என்பது தெரியவந்தது. பின்னர், அருகிலிருந்த காவல் துறையினர் அவரை அப்புறப்படுத்தினர்.

இதையும் படிங்க: குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தவிர்க்க விழிப்புணர்வு பேரணி!

Intro:பெண்களுக்கு எதிரான வன்கொடுமை விழிப்புணர்வு நிகழ்ச்சியில் குடித்துவிட்டு வந்து சேட்டை செய்த முதியவர்

Body:கரூர் மாவட்டம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சுவாதி பெண்கள் இயக்கம் மற்றும் தமிழக மதுஒழிப்பு இயக்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் சர்வதேச பெண்கள் மீதான வன்முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மதுவின் பிடியிலிருந்து குடும்பங்களையும் குழந்தைகளையும் காதல் குறித்து விழிப்புணர்வு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ராஜசேகர் மதிப்பு இயக்கம் மற்றும் ஜெயம்மாள் சுவாதி பெண்கள் இயக்கத் தலைவி போன்றோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.

இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் சமீப காலமாக பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை குடி நோயாளிகள் தமிழகத்தில் அதிகமாக இருப்பதால் தமிழகத்தில் உள்ள அனைத்து சுகாதார மையங்களிலும் மறுவாழ்வு மையங்கள் அமைக்க வேண்டும். குடியால் உயிரிழந்த குடும்பங்களுக்கு அரசு 10 லட்சம் ரூபாய் நிதியுதவியும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகையும் மேலும் தமிழகத்தில் செயல்பட்டு வரும் அரசு மதுபான கடைகள் சட்டவிரோத கடைகள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருகின்றது இதனை படிப்படியாக குறைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போது மதுவுக்கு எதிராகவும் தமிழக அரசுக்கு எதிராகவும் முழக்கங்கள் எழுப்பப்பட்டது அப்போது மது அருந்திவிட்டு ஒருவர் அக்கூட்டத்தில் வந்து அவர்களுடன் இணைந்து கோஷம் எழுப்பி கேலி செய்தார் மேலும் அவர் அங்கு இருக்கக்கூடிய பெண்ணின் உறவினர் என்பதும் தெரியவந்தது மேலும் அருகில் இருந்த காவல்துறையினர் அங்கு வந்து அவரை கண்டித்து அதுமட்டுமல்லாது அவ்விடத்தை விட்டு அகற்றினர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.