கரூரை அடுத்த நீலிமேடு பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன்(53); ஆட்டோ ஓட்டுநர். இவர் ஆட்டோ ஓட்டுவதோடு, தன்னுடைய விவசாய நிலத்தில் நாட்டு மாடுகளையும் வளர்த்து வந்தார்.
இந்நிலையில், இன்று மாட்டுப்பொங்கல் என்பதால் அதிகாலை மாட்டை குளிக்க வைத்து வர்ணங்கள் தீட்டி, படையலிட்டு வழிபடுவதற்கு தயார் செய்வதற்காக, பொருட்கள் வாங்க இருசக்கர வாகனத்தில் செம்மடை நாவல் நகர் பகுதிக்கு சென்று கொண்டிருந்தார்.
![auto driver died in road accident](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-krr-03-auto-driver-accident-vis-script-7205677_16012020142643_1601f_1579165003_140.jpg)
அப்போது எதிர்பாராதவிதமாக சாலையோரம் இருந்த மின்கம்பம் மீது இருசக்கர வாகனம் வேகமாக மோதியது. இதில், தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பாண்டியன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து வாங்கல் காவல் நிலைய காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.