கரூர் மாவட்டத்தில் புகளுர் வேலாயுதம்பாளையத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலையில் அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில்பாலாஜி மற்றும் கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி ஆகிய இருவரும் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை குறித்து ஆலை மேலாளரிடம் கோரிக்கை வைத்தனர்.
இதன் பின்னர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் கூறியதாவது, "தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் ஊதிய உயர்வு கோரிக்கைகளை முன்னிறுத்தி பேசியபோது, ஆலை தற்போது நிதி பற்றாக்குறையில் இயங்கி வருவதாக தெரிவித்தார்.
ஆலை லாபத்தில் இயங்கும்போது, தொழிலாளர்களுக்கு லாபத்தை கொடுப்பதில்லை. எனவே தொழிலாளர் நலன் கருதி ஊதிய உயர்வு செய்ய வேண்டும். கரோனா தொற்று காலத்தில் சம்பளத்துடன் கூடிய விடுப்பு ஆலைத் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டுமென கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. ஆலை மேலாளரும் அதனை ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்துவதாக வாக்குறுதி அளித்துள்ளார்" என அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கரோனாவுக்கு குட்பை: வீடு திரும்பிய அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு