ETV Bharat / state

'திமுக வெற்றிக்காக தீயாய் வேலை செய்யும் டிடிவி...!' - பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ்

கரூர்: திமுக வெற்றிக்காக டிடிவி தினகரன் தீவிரமாக வேலை பார்க்கிறார் என பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.

அன்புமணி ராமதாஸ்
author img

By

Published : May 15, 2019, 12:20 PM IST

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் அணித் தலைவர் அன்புமணி தலைமையில் தேர்தல் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி, போக்குவரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

அப்போது, ‘திமுகவின் மற்றொரு அணியாக டிடிவி தினகரன் செயல்பட்டுவருகிறார். அவர் திமுகவின் வெற்றிக்காக வேலை பார்த்துக்கொண்டிருக்கிறார்.

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு எப்படியாவது முதலமைச்சராக வேண்டும் என்ற ஆசை உள்ளது. அவருக்கு மக்களைப் பற்றிய சிந்தனையோ, வேறு எதைப்பற்றிய சிந்தனையோ இல்லை. அது மட்டுமல்லாமல், ஸ்டாலின் என்னைப் பற்றியும், ராமதாசை பற்றியும், முதலமைச்சர், துணை முதலமைச்சர், பிரதமர் மோடி பற்றியும் அசிங்கமாகப் பேசுகிறார்.

திமுக வெற்றிக்காக டிடிவி தினகரன் வேலை பார்க்கிறார் - அன்புமணி ராமதாஸ் சாடல்

மேலும், 89 எம்எல்ஏக்களை வைத்திருக்கும் திமுக இதுவரை ஒரு ஆணியைக் கூட பிடுங்கமுடியவில்லை. சந்திரசேகர் ராவ் சந்தித்ததற்கு காரணம் இருக்கிறது.

பாஜகவும் வேண்டாம், காங்கிரசும் வேண்டாம், மூன்றாவது அணியை உருவாக்குவோம் என்ற அடிப்படையில் ஒரு மணி நேரம் பேச்சுவார்த்தை நடைபெற்றது’ என அன்புமணி விமர்சித்துப் பேசினார்.

Intro:திமுக வெற்றிக்காக தினகரன் வேலை பார்க்கிறார் - அன்புமணி ராமதாஸ்

Body:கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தேர்தல் பொதுக்கூட்டம் நடைபெற்றது இதில் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி போக்குவரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

அப்போது பொதுக் கூட்டத்தில் பேசிய அன்புமணி ராமதாஸ் திமுகவின் மற்றொரு அணியாக தினகரன் செயல்பட்டு வருகிறார் திமுக வெற்றிக்காக வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார் மேலும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு எப்படியாவது முதலமைச்சராக வேண்டும் என்ற ஆசை மக்களைப் பற்றியோ வேறு எதைப்பற்றியும் சிந்தனை இல்லை.

மேலும் ஸ்டாலின் என்னை பற்றி ராமதாசை பற்றி முதலமைச்சர் துணை முதலமைச்சர் மற்றும் மோடி ஆகிய உரை அசிங்கமாகப் பேசுகிறார். மேலும் 89 எம்எல்ஏக்களை வைத்திருக்கும் திமுக இதுவரை ஒரு ஆணியை கூட புடுங்க வில்லை என்றார்.

சந்திரசேகர ராவ் சந்தித்ததற்கு காரணம் இருக்கிறது பிஜேபியும் வேண்டாம் காங்கிரஸின் வேண்டாம் மூன்றாவது அணியை உருவாக்கவும் என்ற அடிப்படையில் ஒரு மணி நேரம் பேச்சுவார்த்தை நடைபெற்று உள்ளது மேலும் காங்கிரஸ் மீது உள்ள நம்பிக்கை போய்விட்டது ஏனென்றால் மத்தியில் மறுபடியும் மோடி ஆட்சி வர வாய்ப்பு உள்ளது அவருடன் தொடர்பு கொண்டு உள்ளார் என்றார்.

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அவர்கள் ஒரு திட்டத்தை வெளியிட்டுள்ளார் அதாவது காவிரி கோதாவரி இணைப்பு திட்டம் உண்மையிலேயே இந்த திட்டம் வரவேற்கத்தக்கது இந்த திட்டம் வந்துவிட்டால் தமிழகத்தில் தண்ணீர் பிரச்சனை இருக்காது என்றார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.