கரூர் மாவட்டத்தில் முக்கிய ஆறுகளில் ஒன்று அமராவதி, இந்த ஆறு திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அணையில் இருந்து ஆற்றின் கடைமடை பகுதியான கரூர் மாவட்டத்திற்கு வந்தடைகிறது.
இந்த ஆறு கரூர் மாவட்டத்தில் உள்ள அரவக்குறிச்சி, சின்னதாராபுரம் போன்ற பகுதிகளில் விவசாயத்துக்கும் பாசன வசதி மட்டுமின்றி, குடிநீர் தேவைக்கும் மிகுந்த பயன் அளிக்கிறது.
கடந்த சில நாள்களுக்கு முன்பு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டதன் பெயரில் ஆற்றில் இருந்து 15 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது,
தற்பொழுது அமராவதி ஆற்றில் நீர்வரத்து குறைந்து, ஒரு நாள் ஒன்று விகிதம் 294 கன அடி மட்டும் நீர்வரத்து இருக்கிறது. இதனால் அமராவதி ஆறு வறண்ட நிலையில் காணப்படுகிறது.